அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு குறித்து கூட்டு தணிக்கை நடத்தப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- டாக்டர் பாலாஜி எங்களிடம் சகஜமாக பேசினார்.
- டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் டாக்டரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
டாக்டர் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் பாலாஜி எங்களிடம் சகஜமாக பேசினார்.
* பாலாஜிக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
* இன்று மதியத்திற்கு பின்னர் டாக்டர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்படுவார்.
* டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* மருத்துவ கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு குறித்து கூட்டு தணிக்கை நடத்தப்படும்.
* நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்தார்.