தமிழ்நாடு

இன்று காலை 10 வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2024-10-25 01:51 GMT   |   Update On 2024-10-25 01:51 GMT
  • 19 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
  • கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

இன்று காலை 10 வரை ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டலம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்திய வானிலை மையம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News