உலகம் (World)
ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்- சீன அதிபரிடம் சொன்ன புதின்

Published On 2022-02-25 15:58 GMT   |   Update On 2022-02-25 15:58 GMT
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
பீஜிங்:

உக்ரைன் மீது ரஷிய படைகள் 2-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி தாக்குதல் நடத்தி வருகின்றன. 

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, உக்ரைனுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.

அதே சமயம், பேச்சுவார்த்தை நடத்தவும் சண்டையை  நிறுத்தவும் ரஷிய அதிபர் புதினுக்கு, உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி மீண்டும் அழைப்பு விடுத்தார். 

போர் நடைபெறும் சூழ்நிலையில் ரஷியா, சீன தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த விவகாரத்தில் சீனா, ரஷியாவிற்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News