உலகம் (World)
தாக்குதலில் உருக்குலைந்த உக்ரைன் ராணுவ வாகனம்

ரஷியாவின் தாக்குதலில் 198 பேர் கொல்லப்பட்டனர்- உக்ரைன் மந்திரி தகவல்

Published On 2022-02-26 10:06 GMT   |   Update On 2022-02-26 10:06 GMT
போர் நீடிப்பதால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
கீவ்:

உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீவுக்குள் புகுந்தும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். 

இந்நிலையில், ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 3 குழந்தைகள் உள்பட 198 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 33 குழந்தைகள் உள்பட 1115 பேர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் சுகாதாரத்துறை மந்திரி விக்டர் லியாஷ்கோ தெரிவித்தார். ஆனால் கொல்லப்பட்டவர்களில் ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உள்ளார்களா என்ற தெளிவான விவரம் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News