உலகம் (World)
ரஷியாவில் வெளிநாட்டு பணத்துக்கு தடை

செப்டம்பர் 9-ந்தேதி வரை ரஷியாவில் வெளிநாட்டு பணத்துக்கு தடை

Published On 2022-03-09 07:14 GMT   |   Update On 2022-03-09 07:14 GMT
வெளிநாடு செல்லும் மக்கள் குறிப்பிட்ட அளவே பணத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர் என்று ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
மாஸ்கோ:

ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. மேலும் பல்வேறு நிறுவனங்கள் ரஷியாவில் தங்களது சேவையை நிறுத்தி உள்ளன.

இதனால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரஷிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடு செல்லும் மக்கள் குறிப்பிட்ட அளவே பணத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷியாவில் வெளிநாட்டு பணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் மத்திய வங்கி வெளிநாட்டு நாணய விற்பனையை நிறுத்தி உள்ளது. இருப்புகளை பராமரிக்கும் முயற்சியில் வெளிநாட்டு நாணயத்தை மக்கள் வாங்க அனுமதிக்கப்படமாட்டாது.

இந்த நடவடிக்கை செப்டம்பர் 9-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் டாலர் வெளிநாட்டு நாணயத்தை மட்டுமே எடுக்க முடியும். மற்ற அனைத்து நிதிகளும் ரஷிய பணமான ரூபிள்களில் மட்டுமே செலுத்தப்படும். 

Tags:    

Similar News