செய்திகள் (Tamil News)

நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம்

Published On 2019-06-23 09:48 GMT   |   Update On 2019-06-23 09:48 GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் எல்பிடபிள்யூ கொடுக்காததால் நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறும் நிலையில் இருந்தது. அந்த அணி 28 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. ஷாஹிதி 21 ரன்களுடனும், ரஹ்மத் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

29-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தை ரஹ்மத் எதிர்கொண்டார். பும்ரா வீசிய பந்து பேட்டில் படாமல் ரஹ்மத்தின் காலை தாக்கியது. பும்ரா உள்பட இந்திய அணி வீரர்கள் அப்பீல் கேட்டனர். ஆனால், நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் கத்தினார். இதுகுறித்து ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது. விராட் கோலியும் தனது தவறை ஒத்துக் கொண்டார். இதனால் போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News