செய்திகள் (Tamil News)

நவராத்திரி விழா: 21 வகையான காய் - கனிகளால் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம்

Published On 2016-10-08 09:16 GMT   |   Update On 2016-10-08 09:16 GMT
மதுரை திருநகரில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 21 வகையான காய்கனிகளால் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கடந்த 2-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது திருவிழாவையொட்டி தினமும் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

திருவிழாவின் 6-வது நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சகாம்பரி அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக 300 கிலோ தக்காளி, கத்திரி, புடலை, மிளகாய், வாழை என்று 21 வகையான காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்கண்ணன் அலுவலர் இருதயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ஹரிபட்டர் தலைமையில் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் அலங்கார பணியில் 50 பேர் ஈடுபட்டனர்.

சகாம்பரி அலங்காரத்தை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்புபூஜையும் மகாதீப ஆராதனையும் நடந்தது. அம்மனுக்கு படைக்கப்பட்ட காய்-கனிகள் யாவும் கதம்பசாதமாக தயார் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Similar News