செய்திகள்

திருமலையில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு

Published On 2019-05-16 08:27 GMT   |   Update On 2019-05-16 08:27 GMT
திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு நாளில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் 2 நாட்களாக நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 6 மணியளவில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

அங்குள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தில் வைத்து உற்சவர்களுக்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8.30 மணியளவில் நாராயணகிரி பூங்காவில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அத்துடன் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி லட்சுமிகாந்தம், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News