புதுச்சேரி

உருளையன்பேட்டை அருந்ததி நகர் முத்தாலம்மன் கோவில் திருப்பணிக்காக அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.11 லட்சம் நிதியை மத்திய மந்திரி நாராயணசாமி முன்னிலையில் கோவிலுக்கு வழங்கினர்.

முத்தாலம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.11 லட்சம் நிதி

Published On 2023-09-17 08:25 GMT   |   Update On 2023-09-17 08:25 GMT
  • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் குடும்பத்தினர் வழங்கினர்
  • கோவிலில் மகா மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

புதுச்சேரி:

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதி அருந்ததி நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் கோவில் திருப்பணிக்காக குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.11 லட்சம் நிதி  வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவிலில் மகா மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை மந்திரி நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, ஜான்குமார், சிவசங்கரன், அசோக் பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News