புதுச்சேரி

புத்தகத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்ட காட்சி.

அப்துல் மஜீத் நினைவஞ்சலி புத்தகம்-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டார்

Published On 2022-12-21 04:24 GMT   |   Update On 2022-12-21 04:24 GMT
  • புதுவை வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெறும் 26-வது தேசியப் புத்தகக் கண்காட்சியின் 5-வது நாளில் முனைவர் ரஜியா மற்றும் ஷம்ஷத் ஆகியோர் பிரெஞ்சு மொழியில் எழுதிய தியாகி அப்துல் மஜீத் நினைவஞ்சலி புத்தகத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டார்.
  • விழாவில் புத்தகக் கண்காட்சியின் சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்கவுரை ஆற்றினார்.

புதுச்சேரி:

புதுவை வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெறும் 26-வது தேசியப் புத்தகக் கண்காட்சியின் 5-வது நாளில் முனைவர் ரஜியா மற்றும் ஷம்ஷத் ஆகியோர் பிரெஞ்சு மொழியில் எழுதிய தியாகி அப்துல் மஜீத் நினைவஞ்சலி புத்தகத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டார்.

இதனை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார். விழாவிற்கு சீனு. மோகன்தாஸ் தலைமை வகித்தார். கவிஞர்கள் பாலசுப்ரமணியன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.

விழாவில் புத்தகக் கண்காட்சியின் சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்கவுரை ஆற்றினார். ஷர்மிளா பகதூர், ஜஸ்லீன், பூர்ணா, ஷபானா பர்வீன், அன்னமேரி, பிரேமலதா, சசிகுமார், மனோகரன், முகம்மது சிக்கந்தர், மற்றும் சாதிக் அலி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

Tags:    

Similar News