புதுச்சேரி

ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

14 பஞ்சாயத்துகளில் பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு

Published On 2023-11-17 08:41 GMT   |   Update On 2023-11-17 08:41 GMT
  • அரியாங்குப்பம் கொம்யூனில் அதிகாரிகள் ஆலோசனை
  • ஆயுஷ்மான் பாரத திட்டம் உள்ளிட்ட 17 வகையான திட்டத்தை விளக்கும் விதமாக அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி:

மத்திய அரசு விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா என்ற தலைப்பில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் அதன் பயன்பாட்டை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக வருகிற 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துக்கு, மத்திய அரசின் நல திட்ட விளக்க பிரசார வாகனம் வருகிறது.

அதனை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கொண்டு வந்த குடிநீர் வழங்கும் திட்டம், எரிவாயு திட்டம், ஆயுஷ்மான் பாரத திட்டம் உள்ளிட்ட 17 வகையான திட்டத்தை விளக்கும் விதமாக அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மண்டல அதிகாரி மற்றும் உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரி ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், நோடல் அதிகாரிகள், செயலாக்க அதிகாரிகள் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம், நலவழித் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, வருவாய்த்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை ஊழியர்கள், இந்தியன் வங்கி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்ட மற்ற துறை சார்ந்த ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News