புதுச்சேரி

கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

புதுவையில் பா.ஜ.க. அதிகார ஆட்டம் ஆடி வருகிறது

Published On 2023-11-01 07:48 GMT   |   Update On 2023-11-01 07:48 GMT
  • அன்பழகன் ஆவேசம்
  • புதிய சட்டப்பேரவை கட்டப்படும் என்று இவர் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முறை கூறியிருப்பார்.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் சந்திப்பு கே.வி.பி மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மணவெளி தொகுதி செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வி.கே.மூர்த்தி, அன்பழகன், சீவராமராஜா,மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

புதுவையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நம் தொண்டர்களின் உழைப்பால் உருவானது. அதை மறந்துவிட்டு கடந்த 2 1/2 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ளவர்கள் நம்மை பற்றி சிந்திக்காமல் ஆட்சி நடத்தினர். பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அறிவித்த பிறகு புதுவை மாநிலத்தில் தமிழகம் போன்று அ.திமு.க. வீறுகொண்டு எழுந்துள்ளது.

முதல்- அமைச்சரின் பணியில் பா.ஜ.க. துணையோடு ஒரு இணை முதல்- அமைச்சர் போன்று சபாநாயகரின் செயல்பாடு உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சபாநாயகர்களும் செய்ய துணியாத பல விஷயங்களை மரபு மீறி நம் சட்டப்பேரவை தலைவர் செய்து வருகிறார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சி சார்பில் நடைபெறும் திறந்தவெளி பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை போன்ற பல்வேறு துறைகளின் அறிவிப்புகளை தானே வெளியிடுகிறார். புதுவை மாநிலத்தில் புதிய சட்டப்பேரவை கட்டப்படும் என்று இவர் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முறை கூறியிருப்பார்.

என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. தங்களுடைய மக்கள் செல்வாக்கு என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் அதிகார ஆட்டம் ஆடிக்கொண்டு வருகின்றனர்.

சபாநாயகரின் செயலை முதல்- அமைச்சர் வேடி க்கை பார்த்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன்,

மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், . எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, காந்தி, மணவாளன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்கள் பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.

முடிவில் நோணாங்குப்பம் வார்டு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News