புதுச்சேரி

கோப்பு படம்.

ரசாயன தொழிற்சாலை விபத்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு

Published On 2023-11-05 08:45 GMT   |   Update On 2023-11-05 08:45 GMT
  • அ.தி.மு.க. வலியுறுத்தல்
  • அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படும் போதும் சிலர் மரணம் அடைந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலாப்பட்டு தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர விபத்தினால் 3 பிளான்டுகள் முழுமையாக எரிந்தது. அதில் 12-க்கும் மேற்பட்டவர்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்டனர்.நேற்று இரவு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டவுடன் 5 பேர் மரணமடைந்ததாக தகவல் பரவியது. அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படும் போதும் சிலர் மரணம் அடைந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

அந்த கம்பெனியில் விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் வசிக்கும் பலர் பாதிக்கப்படுகின்றனர். அங்கு நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர் முறையாக சுத்திகரிக்காமல் கடலில் கலக்கப்படு வதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

நடைபெற்ற விபத்து குறித்தும், விபத்துக்கு பிறகு நடைபெற்ற சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

ரசாயனம் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படலாமா என தேசிய அளவிலான வல்லுனர்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை தற்காலிகமாக அந்த நிறுவ னத்தை மாவட்ட கலெக்டர் மூட உத்தர விட வேண்டும்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி கெமிக்கல் சம்பந்த ப்பட்ட ஒரு வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார்.

Tags:    

Similar News