புதுச்சேரி

கோப்பு படம்.

null

தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தொடர் போராட்டம்

Published On 2023-11-11 08:22 GMT   |   Update On 2023-11-11 08:24 GMT
மாணவ அமைப்புகள் தீர்மானம்

புதுச்சேரி:

புதுவை தமிழ் சங்கத்தில் அனைத்து கல்லூரி மாணவ தலைவர்கள் ஆலோசனைக் கட்டம் நடந்தது.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், புதுவையில் அவசரகதியில் தேசிய கல்விக் கொள்கையை அரசு திணிக்கக்கூடாது.

தேசிய கல்விக் கொள்கை குலக்கல்வி முறையை மட்டுமன்றி மாணவர்களின் ஆழமான கல்வி அறிவை பறிக்கும் என கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். இதை ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. வரும் ஜனவரி மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சந்திரா தேசிய கல்வி கொள்கை சாதக பாதகங்களை விளக்கினார். பீபோல்டு பஷீர் தேசிய கல்வி கொள்கையின் உள் நோக்கங்களை விளக்கினார். தமிழ்ச்சங்கம் திருநாவுக்கரசு புதுவை மாநிலம் இழந்து வரும் உரிமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தாகூர் கலை கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, ராஜீவ்காந்தி கலைக்கல்லூரி மாணவ தலைவர்கள் மனோஜ், கவுதம், பிரதீப், ராஜ், ராகுல், பிருந்தா, நர்மதா, சாந்தினி, விஜயலட்சுமி, ரெஜினாமேரி, ஜெயசூர்யா, நிவேதா, கீர்த்தனா, கிரிதரன், வீரகவுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News