புதுச்சேரி

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

ஆன்லைன் முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-02 09:49 GMT   |   Update On 2023-11-02 09:49 GMT
  • 10 ஆண்டு பணி முடிந்தவர்களை நிரந்தரம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
  • மேம்பாட்டுக்கழகம் மூலம் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆதிதிராவிடர் நற்பணி இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர் உரிமை சங்கம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகறை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் மாயவன் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நற்பணி இயக்க செயலாளர் வீரசெல்வம் முன்னிலை வகித்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கொளஞ்சியப்பன், சரவணன், உமாசாந்தி, விவசாய தொழிலாளர் சங்கம் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும். பாகூர்பேட் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். நலத்துறையில் 17 ஆண்டாக பணிபுரியும் 67 தினக்கூலி சமையல் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடிந்தவர்களை நிரந்தரம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

 நலத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பெண்களை இடமாற்றம் செய்யக்கூடாது.

இலவச கல்விக்கான முழு கட்டணத்தையும் பள்ளி, கல்லூரி தொடங்கிய 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும். கல்வி உதவி த்தொகை பெற ஆன்லைன் முறையை கைவிட வேண்டும். மேம்பாட்டுக்கழகம் மூலம் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Tags:    

Similar News