புதுச்சேரி

கூட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசிய காட்சி.

சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டிதர வேண்டும்

Published On 2023-11-23 08:09 GMT   |   Update On 2023-11-23 08:09 GMT
  • உருளையன்பேட்டை தி.மு.க. தீர்மானம்
  • சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத ஆதிதிராவிட நலத்துறை முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை தொகுதி மற்றும் கிளை தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீடாராஜப்பர் வீதியில் உள்ள தென்றல் அரங்கில் நடந்தது.

தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல் வரவேற்றார். அவை தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், மாணவர் அணி அமைப்பா ளர் மணிமாறன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தகர் அணித் தலைவர் செல்வ முத்து குமார விநாயகம் , அமைப்பு சாரா ஓட்டுநர் அணித் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.மாநில துணை அமைப்பாளர்அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளரும், தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் செய்திருந்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உருளையன்பேட்டையில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக கட்டிக் கொடுக்க போதிய நிதியை வருகின்ற நிதி ஆண்டில் ஒதுக்கி, புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கவும் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தி மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரமான குடிநீர், தடையில்லா மின்சாரம், தரமான சாலை வசதிகளை மேம்படுத்தவும் உரிய நட வடிக்கையை மேற்கொள்ள அரசை வலியுறுத்துவது.

ராஜா நகரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத ஆதிதிராவிட நலத்துறை முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது.

உப்பனாறு மேம்பால கட்டுமான பணியை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அண்ணா திடலை சுற்றி அமைந்துள்ள குபேர் பஜார் மற்றும் நேரு பஜார் கடைகளை 3 ஆண்டாக கட்டி ஒப்படைக்காத அரசின் மெத்தன போக்கு மற்றும் செயலற்ற தன்மையால் வியாபாரிகளை அல்லல்பட வைத்துள்ள அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. கூட்டத்தில், தொகுதி துணை செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், புவனேஷ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

முடிவில் தொகுதி பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News