புதுச்சேரி

அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.

வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் - சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-10-11 08:15 GMT   |   Update On 2022-10-11 08:15 GMT
  • வில்லியனூர் தொகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.
  • வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகின்றார்.

புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது.

மேலும் சாலைகளும் சேதமானது. அதுபோல் இந்த ஆண்டு மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் அப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில்நடை பெற்றது.கூட்டத்திற்குசிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன் (தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு), சுந்தர்ராஜன் (பொது சுகாதாரக் கோட்டம்), ராதாகிருஷ்ணன் (நீர்பாசனக் கோட்டம்), உதவிப் பொறியாளர்கள் மீனாராணி, வாசு, சீனுவாசன், கோபி, மதி, சேகர், இளநிலைப் பொறியாளர்கள் திருவேங்கடம், சித்தார்த்தன், நடராஜன், சங்கர் மற்றும் வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் ராமசாமி, விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, முத்து, அருள், வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லியனூர் தொகுதி வழியாக செல்லும் கருப்பட்டி வாய்க்கால், ஆத்து வாய்க்கால், ஒதியம்பட்டு வாய்க்கால், மேட்டு வாய்க்கால், சன்னதி வாய்க்கால் உள்ளிட்ட நீர்பாசன வடிக்கால் வாய்க்கால்கள் மழைக்கு முன் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

அரும்பார்த்தபுரம் முதல் முத்துப்பிள்ளை ப்பாளையம் வரை செல்லும் சாலையை செப்பனிடுதல், ஜி.என். பாளையம், மணவெளி, ஒதியம்பட்டு ஆகிய கிராமங்களில் புதிய போர்வெல் அமைக்க வேண்டும். வில்லியனூர், சுல்தான்பேட், கொம்பாக்கம்பேட், ஒட்டாம்பாளையம் ஆகிய இடங்களில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வில்லியனூர் பிருந்தாவனம் நகர் விரிவாக்கம், எஸ்.எம்.வி.புரம், கொம்பாக்கம் பிரியதர்ஷினி நகர், சிவசக்தி நகர், மணக்குள விநாயகர் நகர் பகுதிகளில் புதிய குடிநீர் பைப்–லைன் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News