புதுச்சேரி

பாப்ஸ்கோ நிறுவனத்தை திறக்க கோரி கொட்டும் மழையில் ஏ.ஐ.டி.யூ.சி.யினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

பாப்ஸ்கோ நிறுவனத்தை திறக்க கோரி கொட்டும் மழையில் ஊழியர்கள் போராட்டம்

Published On 2023-10-30 08:30 GMT   |   Update On 2023-10-30 08:30 GMT
  • ஊர்வலமாக சென்றனர்
  • பாப்ஸ்கோ ஊழியர் நலச்சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

புதுச்சேரி:

பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்த வலியுறுத்தியும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை கேட்டும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கொட்டும் மழையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் நலச்சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, மாநிலசெயலாளர்கள் முத்துராமன், துரை செல்வம், தயாளன், பாப்ஸ்கோ ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி,பத்மநாபன், ரவி, ஏழுமலை, முருகவேல், வேலு, பாலமுருகன், கமிட்டி உறுப்பினர்கள் ஜீவரத்தினம், ராஜூ, விசுவநாதன், குமரகுரு, அமுதா, அம்சவல்லி, நக்கீரன், சத்தியசீலன், ஊழியர்கள் கோவர்தன், குணா, கெஜவரதன், நாராயணன், பாலச்சந்தர், பார்த்திபன், செந்தில், சௌந்தர்ராஜன், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் அடைக்கலராஜ், பாலா சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சட்டசபை அருகே வந்தது. அவர்களை போலீசார் ஆம்பூர்சாலையில் தடுத்து நிறுத்தினர்.

அங்கு பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்த வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News