புதுச்சேரி

நோணாங்குப்பம் முகத்துவார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு முகத்துவார பகுதி உடையும் அபாயம்

Published On 2023-11-14 04:52 GMT   |   Update On 2023-11-14 04:52 GMT
  • சுண்ணாம்பாற்றில் மழைநீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது.
  • சுண்ணாம்பாறு முகத்துவார பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி, தமிழக பகுதியில் தொடர் மழை காரணமாக சுண்ணாம்பாற்றில் மழைநீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சுண்ணாம்பாறு முகத்துவார பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சமூக அமைப்புகள் சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்று காலை முகத்துவாரப் பகுதியை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் பார்வை யிட்டனர்.

பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு முகத்துவாரம் வெட்டி விடப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதனால் பேரடைஸ் பீச் பகுதி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கரையோர கிராமங்களான சின்ன வீராம்பட்டினம், ஓடைவெளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் பகுதியில் ஆற்றின் கரை யோரத்தில் அமைந்துள்ள விளை நிலங்களிலும் மழை நீர் புகுந்துள்ளதால் ஏராள மான வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

Tags:    

Similar News