புதுச்சேரி

தென்பெண்ணை ஆற்றின் இருந்துவந்த நீர் சொர்ணாவூர் அணைகட்டை வந்து அடைந்தது.

தென்பெண்ணை ஆற்றின் இருந்து தண்ணீர் புதுச்சேரியை எட்டியது

Published On 2022-08-10 09:22 GMT   |   Update On 2022-08-10 09:22 GMT
  • தமிழகம்,கேரளா கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இதனால் ஆற்றில் நிரம்பிய உபிரி நீரை அணைக்கட்டுகள் மூலம் வெளியேற்றுகின்றனர்.

புதுச்சேரி:

தமிழகம்,கேரளா கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நிரம்பிய உபிரி நீரை அணைக்கட்டுகள் மூலம் வெளியேற்றுகின்றனர்.

அதன்படி சாத்தனூர் அணைக்கட்டில் நிரம்பிய நீர் 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு தென்பெண்ணையாற்றில் வந்து கொண்டுள்ளது. இந்த உபரி நீர் படிப்படியாக குறைந்து புதுவையின் எல்லை பகுதியான கரையாம்புத்தூர் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு சுமார் 500 கன அடியாக இன்று காலை வந்தடைந்தது. தற்பொழுது இந்த ஆற்றில் ஒரு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணைக்கட்டில் இருந்து ஒரு மதகு திறக்கப்பட்டு அதன் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் சித்தேரி அணைக்கட்டை அடைய 2 நாட்கள் பிடிக்கும் என கூறப்படுகிறது. சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் மூலமாக பாகூர் ஏரிக்கு நீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து உள்ளனர்.

அதன் வழியாக சுமார் 80 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வாய்க்காலில் ஓடுகிறது. இந்த நீர் பாகூர் ஏரியை இன்று இரவு அல்லது காலையில் வந்தடையும். வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆறு வற்றி இருந்த நிலையில் தண்ணீர் வந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கட்டை பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News