புதுச்சேரி
கோப்பு படம்.

புதுவை மாநிலம் முழுவதும் கஞ்சா-போதை பொருட்கள் பரவியுள்ளது

Published On 2023-11-29 09:44 GMT   |   Update On 2023-11-29 09:44 GMT
  • வைத்திலிங்கம் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு
  • புதுவையில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்திரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை காப்பாற்றி யவர்களுக்கு புதுவை மக்கள், காங்கிரஸ் சார்பில் பாராட்டுக்கள். பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு உரிய நிவார ணம், அனைத்து சுகாதார வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதர வேண்டும்.

இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் சீனாவிலிருந்து பரவும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சுவாசத்தை பாதிக்கும் நோய் பரவுகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை யில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும். புதுவையில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு இதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது.

சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் இதுவரை எந்த மருத்துவமனையையும் ஆய்வு செய்யவில்லை. முதல்-அமைச்சர் நேரடியாக மருத்துவமனை பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். மதுக்கடைகளை திறந்து பாவத்தை சேர்க்கும் முதல்-அமைச்சர் மருத்துவ மனையில் சுகாதார பணிகளை மேற்கொண்டு புண்ணியத்தை தேட வேண்டும்.

மானியம் பெற்றவர்கள் பால்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கி றார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். கடந்த ஆண்டு மானியம் பெற்றவர்கள் குறித்து விசா ரணை நடத்த வேண்டும். புதுவையில் குழந்தைகளுக்கு பால் பற்றாக்குறை நிலவு கிறது. ஆனால் மது தட்டுப் பாடின்றி கிடைக்கிறது.

புதுவை மின்துறை, கல்வித்துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தொழில்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த துறைகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது. மின்துறையை தனியாருக்கு அரசு விற்றுவிட்டதாக கருதும் வகையில் தனியார் மூலம் பணிகள் நடக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கல்வித்துறையில் ஓய்வுபெற்றவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களை பணிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். புதுவையில் ஆயிரக்க ணக்கானவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற்று காத்திருக்கின்றனர். இவர்களை நியமிக்க அமைச்சர் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்த அமைச்சர் புதுவைக்கு தேவையா? என மக்கள் சிந்திக்கின்றனர். தனது நிலைப்பாடை அமைச்சர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

முதல்-அமைச்சர் அவரை பணி செய்ய முடுக்கிவிட வேண்டும். புதுவை மாநிலம் முழுவதும் புற்றுநோய் போல கஞ்சா போன்ற போதைப்பொரு ட்கள் பழக்கம் பரவியுள்ளது. இளைஞர்கள் இந்த பழக்கத்தால் சீரழிந்து வரு கின்றனர். ஆட்சியா ளர்களின் ஆதரவா ளர்க ள்தான் போதை ப்பொருட்களை 99 சதவீதம் விற்பனை செய்கின்றனர். அமைச்சர், காவல்துறை இரண்டும் செயல்பட வில்லை. அமைச்சர் செயல்பாடு மக்களுக்கு உதவிகரமாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News