புதுச்சேரி
கோப்பு படம்.

கடல் சிவப்பாக மாறிய மர்மத்தை கண்டறிய நிபுணர்குழுவுக்கு 2 மாதம் கெடு

Published On 2023-11-28 06:36 GMT   |   Update On 2023-11-28 06:36 GMT
  • பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
  • கடல்நீர் நிறம் மாறியது சுற்றுச்சூழல் பிரச்சினை.

புதுச்சேரி:

புதுவை வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் 6 முறை கடல்நீர் சிவப்பு நிறமாக மாறியது.

ரெட் டைட் எனப்படும் நச்சு பாசிப்பூக்கள்தான் இதற்கு காரணம் என செய்திகள் வெளியானது. இதையடுத்து தாமாக முன்வந்து, வழக்குப் பதிந்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் பிரகாஷ்ஸ்ரீவத்சவா, நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதன்பின் அவர்கள் அளித்த உத்தர வில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கடல்நீர் சிவப்பு நிறமாக மாறியதற்கு கடல்டைனோப்ளோ ஜெல்லட்டுகளின் நோக்டிலூக்கா இனத்தில் சிவப்பு நிறமிகளால் கடல்நீர் மாறியிருக்கலாம் என தெரிவித்தார். தொழிற்சாலை மாசுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை. கடல்நீர் நிறம் மாறியது சுற்றுச்சூழல் பிரச்சினை.

எனவே இதுகுறித்து ஆராய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், புதுவை வாரிய செயலர், புதுவை பல்கலைக்கழக கடல் உயிரியல் துறை தலைவர், பரங்கிப்பேட்டை கடல் உயிரியல் ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழு மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, சிவப்பு நிறமாக மாறிய காரணத்தை கண்டறிந்து 2 மாதத்தில் சென்னையில் உள்ள தென்மண்டல அமர்வில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை தென் மண்டல அமர்வில் வருகிற ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News