புதுச்சேரி

கார்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதை படத்தில் காணலாம்.

புதுவையில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2023-11-23 08:06 GMT   |   Update On 2023-11-23 08:06 GMT
புதுவை மட்டுமின்றி கோவை, சேலம், திருச்சி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

புதுச்சேரி:

விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளி பிழம்பாய், சிவன் காட்சி யளித்த நாள் கார்த்திகை பவுர்ணமியாகும்.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் தீபம் ஏற்றி வைப்பதும், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபம் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக அகல் விளக்கு செய்யும் பணி புதுவையில் தீவிரமாக நடக்கிறது. முருங்கபாக்கம், திருக்காஞ்சி, பிள்ளையார்குப்பம் பகுதியில் அகல்விளக்கு செய்யும் பணிகளில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களை கவர புது வகையான விளக்குகளை தயாரிப்பர். இந்த ஆண்டு 9 வண்ண ங்களில் 20 வகையான விளக்குகளை கைவினை கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். 5 முகலட்சுமி, விநாயகர், யானை, அலாவுதீன், ராந்தல், தாமரை, நட்சத்திரம், துளசி மாடம் போன்ற வடிவங்க ளிலும் அகல் விளக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த விளக்குகள் புதுவை மட்டுமின்றி கோவை, சேலம், திருச்சி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விளக்குகள் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News