புதுச்சேரி

வழக்கறிஞர் சசிபாலன் தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்த காட்சி.

உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்

Published On 2023-11-23 08:16 GMT   |   Update On 2023-11-23 08:16 GMT
  • வழக்கறிஞர் சசிபாலன் தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளரிடம் மனு
  • நிழற்குடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் வாடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை உழவர்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெளியூர் மற்றும் பல ஊர்களுக்கு செல்ல பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

ஆனால் அங்கு நிழற்குடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் வாடி வருகின்றனர். சில பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தாலும் அது சரியாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே இதனை உடனடியாக சரி செய்து தரக்கோரி வழக்கறிஞரும் சமூக சேவகருமான சசிபாலன் தலைமையில் சமூக அமைப்பு நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது கலாம் விதைகளின் விருட்சம் இயக்க நிறுவனர் ராஜா உட்பட சமூக அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

உழவர்கரை தொகுதியில் மூலக்குளம் அரும்பார்த்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட நிழற்குடைகளை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலாம் விதைகளின் விருட்சம் இயக்க நிறுவனர் ராஜா உட்பட சமூக அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News