புதுச்சேரி

கோப்பு படம்.

காலாப்பட்டு தொழிற்சாலையை விசாரணைக்கு பிறகே இயக்க அனுமதிக்க வேண்டும்

Published On 2023-11-10 08:43 GMT   |   Update On 2023-11-10 08:43 GMT
  • மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
  • அரசின் தொழிலாளர் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் தொடர் ஆய்வுகள் நடத்தி தொழிலாளர்கள், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

புதுவை காலாப்பட்டு தொழிற்சாலையில் ஏற்பட்ட மோசமான விபத்துக்கு நிர்வாகமே காரணம். அரசின் தொழிலாளர் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் தொடர் ஆய்வுகள் நடத்தி தொழிலாளர்கள், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

புதுவை அரசு தற்போது கலெக்டர் தலைமையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில், தொழிலாளர்துறை ஆய்வா ளர்கள், தொழிற்சாலை ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், குற்றம் இழைத்தவர்கள் மீது முழுமையாக நடத்தப்பட வேண்டும்.

வெளிப்படையாக உண்மை நிலையை வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொழிற்சாலையை முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் தலைமையில் குழு அமைத்து முழு விசாரணை நடத்த வேண்டும்.அதுவரை அந்த தொழிற்சாலையை இயக்க அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News