புதுச்சேரி

மருத்துவ முகாமை பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க புதுவையில் மருத்துவ முகாம்

Published On 2023-11-07 08:13 GMT   |   Update On 2023-11-07 08:13 GMT
  • பா.ஜனதா முன்னாள் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
  • டெங்கு மற்றும் பல்வேறு நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி:

மழைக்காலத்தை முன்னிட்டு பல்வேறு நோய்கள் பரவாமல் இருக்க பிம்ஸ் மருத்துவமனையும் சாமிநாதா வித்யாலயாவும் இணைந்து பொது மருத்துவ முகாமை நடத்தியது.

முகாமை முன்னாள் பா.ஜனதா மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இதில் அனிச்சங்குப்பம், முதலியார் குப்பம் புத்துப்பட்டு, பெரிய கொழுவாரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் டெங்கு மற்றும் பல்வேறு நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பிம்ஸ் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நோய்க்கு தகுந்தார் போல் சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் சிறப்பு மருத்துவர் டாக்டர் அஸ்வினி, இ.என்.டி டாக்டர் கிருஷ்ண குமார் மற்றும் மாலதி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். 

Tags:    

Similar News