புதுச்சேரி

கோப்பு படம்.

குற்ற சம்பவங்களை தடுக்க அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை-வெங்கடேசன் எம்.எல்.ஏ. வரவேற்பு

Published On 2023-04-13 08:14 GMT   |   Update On 2023-04-13 08:14 GMT
  • புதுவை மாநிலத்தில் கஞ்சா பரவி இருப்பதாக தகவல்கள் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் ஆங்காங்கே சில குற்ற சம்பவங்களும் நடந்து வருவதாக அறியப்படுகிறது.
  • நமச்சிவாயம் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வரின் ஒத்துழைப்போடு காவல் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கஞ்சா பரவி இருப்பதாக தகவல்கள் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் ஆங்காங்கே சில குற்ற சம்பவங்களும் நடந்து வருவதாக அறியப்படுகிறது.

இதற்கு முடிவு கட்டும் விதத்தில் நமது மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி காவல்துறை அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

முக்கியமாக போலீசாரை சுதந்திரமாக செயல்படவும், பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உறுதி கொண்டு உள்ளார்.

நமச்சிவாயம் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வரின் ஒத்துழைப்போடு காவல் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அதேபோன்று கடந்த காலங்களில் கிடைக்காத பல வசதிகள் தற்போதைய பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது காவல்து றையினருக்கு தேவையான உள்கட்ட மைப்பு வசதிகள், போலீஸ் வாகன வசதி கள்,அவ ர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க ப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சேதம் அடைந்த ரோந்து வாகனங்கள் இருந்த நிலை மாறி தற்போதைய ஆட்சி காலத்தில் புதிய நவீன ரோந்து வாகனங்கள் அதிக அளவில் வாங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் அங்கங்கே நடக்கக்கூடிய சிறு குற்றங்களை ஒடுக்கும் வகையில் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆகவே இரவு நேர ரோந்து பணியை புதுவை மாநில அளவில் தீவிர படுத்த வேண்டும். முக்கியமாக சில மாநிலங்களுக்கு செல்லும்போது, அங்கு இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து வாகனங்களில் வரும் போது சிகப்பு , நீளம் வண்ணங்களில் எரியக்கூடிய விளக்குகளை ஆன் செய்தவாறு சுற்றி வருகின்றனர்.

அவ்வாறு வருவதன் மூலம் குற்றம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக அச்சம் ஏற்படும். தற்போதைய ஆட்சி காலத்தில் தான் புதுவை வளர்ச்சி கண்டு வருகிறது.வருவாயும் பெருகி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக வெளி மாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஆகவே அவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் முக்கியமாக குற்றங்களை தடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது சி.சி.டி.வி. கேமராக்கள் தான். அது போன்ற சி.சி.டி.வி. கேமராக்கள் அதிகளவில் புதுவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்தாலும் கூட அவற்றில் பல சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழந்து சேதமடைந்து காணப்படுவதாக அறியப்படுகிறது.

அவற்றை மாற்றும் நோக்கத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் 180 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயததின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதோடு நில்லாமல் அவற்றை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டுமே குற்றங்கள் ஒடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News