புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிற்சாலை விபத்தில் குட்டையை குழப்பி ஆதாயம் தேட பார்க்கிறார் நாராயணசாமி

Published On 2023-11-07 05:46 GMT   |   Update On 2023-11-07 05:46 GMT
  • பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. கடும் தாக்கு
  • முதல்-அமைச்சர் நாராயணசாமி பா.ஜனதா அரசுதான் அதற்கு அனுமதி கொடுத்தது என கூறியிருப்பது முழு பொய் அதிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

புதுச்சேரி:

புதுச்சேரி பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

பா.ஜனதா அரசுதான் காலாப்பட்டு மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.

காலாப்பட்டு தொழிற்சாலையில் இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆட்சி காலங்களில் விபத்துகள் நடந்துள்ளன. சுற்று சூழல் மாசு கெடுவதாக சொல்லி அந்தப் பகுதி மக்கள் அப்போதும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர்.

காலாப்பட்டு தொழிற்சாலை 1986-ல் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த பரூக் மரைக்காயர் காலத்தி ல்தான் தொடங்கப்பட்டது.

ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பதால், காங்கிரஸ் தொழிற்சங்கவாதிகள் இந்த ஒரு தொழிற்சாலையை மட்டும். பொன் முட்டையிடும் வாத்து போல பார்த்து வந்தனர்.

பரூக் மரைக்காயர் காலாப்பட்டு தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அவர் முதல்வராகவும் இருந்ததால், எளிதாக இந்த தொழிற்சாலை அந்த காலத்தில் புதுச்சேரிக்குள் நுழைந்துவிட்டது.

நிலைமை இப்படி இருக்க வாய்புளித்ததோ வார்த்தை புளித்ததோ என்று தெரியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பா.ஜனதா அரசுதான் அதற்கு அனுமதி கொடுத்தது என கூறியிருப்பது முழு பொய் அதிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

நாங்கள் சொல்வது தவறு என நாராயணசாமி கூற விரும்பினால், இந்திய கம்பனி சட்டங்களின் இணையதளத்திற்கு சென்று அந்த தொழிற்சாலை எப்படி உருவானது, அது புதுச்சேரியில் எப்படி கால் பதித்தது என்ற வரலாறு களை தெரிந்துகொள்ளட்டும்.

நாட்டை தலைநிமிரச் செய்த பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி செய்யும் பா.ஜனதா கட்சியின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்கு நாராயண சாமிக்கு வேறு காரணங்கள் கிடைக்க வில்லை.

அதனால் இந்த சம்பவத்தை அரசியலாக்கி வரும் எம்.பி. தேர்தலில் ஆதாயம் தேட பார்க்கிறார்.

அவர் எவ்வாறு முயற்சித்தாலும் பா.ஜ.க.வின் புகழையோ, அது நாட்டு மக்களுடன் கொண்டுள்ள தொடர்பையோ ஒரு நூலிழை கூட பிரித்துவிட முடியாது. காலாப்பட்டு தொழிற்சாலை விபத்து சம்பந்தமாக உயர்மட்ட விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்ப ட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசும், கவர்னரும் இந்த விஷயத்தில் மிக விரைவான நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், குட்டையை குழப்பி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என நாராயணசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News