புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் கொட்டும் மழையில் நேரு பிறந்த நாள் விழா நடந்த போது எடுத்த படம்.

அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் கொண்டாட்டம்

Published On 2023-11-14 06:50 GMT   |   Update On 2023-11-14 06:50 GMT
  • பிரம்மன் சிலை சதுக்கம் அருகில் நடைபெற்றது
  • கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.

கொட்டும் மழையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் மீனவர் அணி காங்கேயன், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, பி.சி.சி.திருநாவுக்கரசு, மகளிர் அணி பொன்னி சுப்புராயன், அரியாங்குப்பம் தொகுதி மகளிர் காங்கிரஸ் மகேஸ்வரி, அன்னலட்சுமி, தேங்காய்திட்டு முருகன், மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாவட்ட தொகுதி, கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News