புதுச்சேரி

கோப்பு படம்.

மீன்பிடி இறங்குதளத்தில் விரிசல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-11-16 08:15 GMT   |   Update On 2023-11-16 08:15 GMT
  • மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
  • மீனவர்களுக்கு இந்த மீன்பிடி இறங்கு தளம் மிக முக்கியமான கட்டுமானம் ஆகும்.

புதுச்சேரி:

புதுவை மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது, கண்டிக்கத்தக்கது. இந்த மீன்பிடி இறங்கு தளம் உலக வங்கி நிதியுடன் உருவாக்கப்பட்டது. அதன் மேம்பாட்டுக்கும் விரிவாக்கத்திற்கும் மத்திய அரசு ரூ.55 கோடி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தை சென்ற மாதமே துவங்கி இருந்தால் இந்த விரிசல்கள் ஏற்பட்டு இருக்காது. மீனவர்களுக்கு இந்த மீன்பிடி இறங்கு தளம் மிக முக்கியமான கட்டுமானம் ஆகும். அவர்களது தொழிலை மேம்படுத்தும் ஒரு பெரிய அமைப்பாகும்.

இதைக்கூட ஒரு தரமான நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய வசதியாக அரசால் உருவாக்கித் தர முடியவில்லை. துவக்க விழா செய்வதற்கு முன்பே அது சேதமாகியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர், அதிகாரி மற்ற சம்பந்தப்பட்ட வர்களின் இந்த தரமற்ற வேலைக்கான காரணத்தையும் விளக்கத்தையும் கேட்க வேண்டும்.

அவர்கள் தங்கள் கடமையில் தவறி இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இந்த சேதத்தை சரி செய்ய தேவையான நடவடிக்கை களை உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News