புதுச்சேரி

கல்வித்துறை அலுவலகம் முன்பு பகோடா சுடும் போராட்டம் நடந்த காட்சி.

பகோடா சுட்டு நூதன போராட்டம்

Published On 2023-11-17 08:49 GMT   |   Update On 2023-11-17 08:49 GMT
  • ஆசிரியர் பணிக்கு நேரடி தேர்வு அறிவித்துள்ளது
  • பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

புதுச்சேரி:

புதுவை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு நேரடி தேர்வு அறிவித்துள்ளது. இந்த நேரடி தேர்வில் வயது வரம்பு தளர்வு அளிக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

புதுவை இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் மற்றும் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நேரடி நியமனத்தில் வயது வரம்பு தளர்வு கோரி கல்வித்துறை முன்பு பகோடா சுட்டு விற்கும்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு பிராங்கிளின் பிரான்சுவா தலைமை வகித்தார். சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம், தமிழர்களம் அழகர் முன்னிலை வகித்தனர். கலியபெருமாள், ஜெகநாதன், பிரகாஷ், தீனா உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடுப்பு வைத்து பகோடா சுட்டு அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்து நூதன போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News