புதுச்சேரி

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர் மன்னன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி.

மன்னர் மன்னன் பிறந்த நாளையொட்டி ஓவிய போட்டி

Published On 2023-11-05 08:20 GMT   |   Update On 2023-11-05 08:20 GMT
  • முன்னாள் சபாநாயகரும் கம்பன் கழகச் செயலருமான சிவக்கொழுந்து, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து முன்னிலை வகித்தனர்.
  • உசேன், அசோகா சுப்பிரமணியன், நெய்தல் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன்னர்மன்னன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி, நவ.5-

பாரதிதாசனின் மகனும் முதுபெரும் தமிழறிஞருமான மறைந்த மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாளையொட்டி புரட்சிக் கவிஞர் போற்றிய மன்னர்மன்னன் என்ற தலைப்பில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் ேகா.பாரதி தலைமை தாங்கினார்.

முன்னாள் சபாநாயகரும் கம்பன் கழகச் செயலருமான சிவக்கொழுந்து, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து முன்னிலை வகித்தனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்னர்மன்னன் உருவப் படத்திற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார். வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ,எதிர்க்கட்சித் தலைவர் சிவா , எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அனிபால்கென்னடி, நேரு, கே.எஸ்.பி. ரமேஷ், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள்

எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ , சோமசுந்தரம், கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள், கலால் துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம், உசேன், அசோகா சுப்பிரமணியன், நெய்தல் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன்னர்மன்னன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற "கலைகள் வளர்த்திடுவோம் என்ற மன்னர் மன்னன் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்ட ஓவியப்போட்டியில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பங்கேற்ற அனைத்து மாணவருக்கும் பாராட்டிதழ் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News