புதுச்சேரி

 ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் ஆலோசனை செய்த காட்சி.

மத்திய, மாநில அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்

Published On 2023-11-22 08:13 GMT   |   Update On 2023-11-22 08:13 GMT
28-ந் தேதி நடக்கிறது

புதுச்சேரி:

மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் வருகிற 28-ந் தேதி மாநில தலைநகரங்களில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது.

புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 28-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது

போராட்ட முன் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஏ.ஐ. டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஏ.ஐ. டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.ஏ.ஐ. டி.யு.சி. சார்பில் தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் துரை செல்வம், தயாளன் விவசாய சங்கத்தின் சார்பில் டிபி.ரவி, ராமமூர்த்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பால கிருஷ்ணன், ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் பெரும் திரளாக தொழிலாளர் களையும், விவசாயிகளையும் பங்கேற்க செய்வது என்றும் ஊர்வலத்தின் நோக்கத்தை விளக்கி 25-ந் தேதி காலையில் பாகூர் பகுதியில் தெருமுனை கூட்டமும், அன்று மாலை 4 மணிக்கு சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் தெருமுனை கூட்டமும், தொடர்ந்து 27-ந் தேதி திங்கட்கிழமை காலை முதலியார் பேட்டை வானொலி திடலில் தெரு முனை கூட்டமும் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

Tags:    

Similar News