புதுச்சேரி

கோப்பு படம்.

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கரும்புக்கு நிவாரணம்

Published On 2023-11-24 06:29 GMT   |   Update On 2023-11-24 06:29 GMT
  • அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரிடம் விவசாயிகள் மனு
  • கடும் வெயிலின் தாக்கத்தால் கரும்பு பயிரில் புதுவகையான நோய்கள் தாக்கியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை, இ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கடும் வெயிலின் தாக்கத்தால் கரும்பு பயிரில் புதுவகையான நோய்கள் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து ஏற்கனவே செப்டம்பரிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவில் உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன், பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன், செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஆதிமூலம், கண்ணன், ஜெயகோபி, ராமமூர்த்தி, நாராயணன், ஜீவானந்தம், ராஜாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News