புதுச்சேரி

மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளார்.

மீனவர்களுக்கு ரூ.5½ கோடி மழைக்கால நிவாரணம்

Published On 2023-11-07 08:21 GMT   |   Update On 2023-11-07 08:21 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
  • ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசின் மீன்வளம், மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.

நடப்பு ஆண்டு முதல் ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.5 கோடியே 55 லட்சத்து 12 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டசபையில் நடந்தது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு மழைக்கால நிவாரணத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் புதுவையில் 9 ஆயிரத்து 565, காரைக்காலில் 3 ஆயிரத்து 264, மாகேவில் 523, ஏனாமில் 4 ஆயிரத்து 792 குடும்பத்தினர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News