புதுச்சேரி

அன்னுசாமி பள்ளியில் நடந்த முகாமில் மாணவருக்கு பரிசினை மாநில சாரண சாரணியர் இயக்க மாநில அமைப்பு ஆணையர் சண்முகம் வழங்கிய காட்சி.

அன்னுசாமி மேனிலை பள்ளியில் சாரண- சாரணியர் பயிற்சி முகாம்

Published On 2023-11-24 06:31 GMT   |   Update On 2023-11-24 06:31 GMT
  • மாலை கேம்பயர் நிகழ்ச்சியில் நடனம், நாடகம், இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  • பள்ளித் தலைவர் இருதயமேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நீலம். அருள்செல்வி வாழ்த்துரை வழங்கினார்.

புதுச்சேரி:

பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் 2 நாள் சாரண- சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 44 சாரணிகளும், 38 சாரணர்களும் மற்றும் 6 சாரண ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

முதல் நாள் சாரணர்கள் ஹைகிங் என்ற நடைபயண நிகழ்வாக புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து நரம்பை வரை கடலோர நடைப்பயணம் மேற்கொண்டனர்.

பிறகு கடற்கரையின் பகுதிகளை சுத்தம் செய்தனர். மாலை கேம்பயர் நிகழ்ச்சியில் நடனம், நாடகம், இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

2-ம் நாள் காலை 5 மணிக்கு உடற்பயிற்சிகள், சர்வசமய பிராத்தனை, கொடி அணிவகுப்பு போன்ற செயல்பாடுகளைச் சிறப்பாக செய்தனர்.

நிறைவு விழாவின் போது புதுச்சேரி மாநில சாரண-சாரணியர் இயக்க மாநில அமைப்பு ஆணையர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சாரண இயக்கத்தின் நோக்கத்தையும் அதன் முக்கித்துவத்தையும் எடுத்துக்கூறினார்.

பள்ளித் தலைவர் இருதயமேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நீலம். அருள்செல்வி வாழ்த்துரை வழங்கினார். சாரண ஆசிரியர் முத்துபாபு மற்றும் இளவரசி பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு செய்தனர். வெற்றி பெற்ற சாரணர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  

Tags:    

Similar News