புதுச்சேரி

கோப்பு படம்.

ஆயுர்வேத மருத்துவம் படித்த மாணவர்கள் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாமல் தவிப்பு

Published On 2023-11-17 04:37 GMT   |   Update On 2023-11-17 04:37 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் முறையீடு
  • மருத்துவ கவுன்சில் இல்லாததால் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பி.ஏ.எம்.எஸ். பட்டம் படித்தவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

புதுச்சேரி:

பெருந்தலைவர் காமராஜர் மருத்துவ கல்லூரி சங்கத்தின் சார்பில் மாகி பிராந்தியத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இங்கு சென்டாக் மூலம் 50 ஆயுர்வேத பட்டப்படிப்பு களில் மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். 4 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பு முடித்தவுடன் ஒரு ஆண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும்.

புதுவைக்கு தனியாக மருத்துவ கவுன்சில் இல்லாததால் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பி.ஏ.எம்.எஸ். பட்டம் படித்தவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே பயிற்சி டாக்டராக சேர முடியும்.

இந்த நிலையில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் 2022-23-ம் ஆண்டில் பட்டம் முடித்த மாணவர்களை அங்கீகரித்து சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது.

இதனால் புதுவை மாணவர்கள் சான்றிதழ்களை பதிவு செய்ய முடியாமலும், பயிற்சி பெற முடியாமலும் 4 ½ மாதமாக தவித்து வருகின்றனர்.

இந்த மாணவர்கள் புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது, அவர் தமிழக அரசிடம் பேசி, கல்வி சான்றிதழ்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதியளித்தார்.

Tags:    

Similar News