புதுச்சேரி

கோப்பு படம்.

தடையை மீறி போராட்டம் நடத்திய தமிழ் தேசிய பேரியக்கத்தினர் கைது

Published On 2023-11-01 08:17 GMT   |   Update On 2023-11-01 08:17 GMT
  • தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி தலைமையில் நிர்வாகிகள் அண்ணாசிலை அருகே கூடினர்.
  • கையில் கருப்பு துணியால் கைகளை கட்டிக்கொண்டு போராட்ட பேனரை தூக்கிப் பிடித்தனர்.

புதுச்சேரி:

தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கைவிலங்கோடு அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில்  தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி தலைமையில் நிர்வாகிகள் அண்ணாசிலை அருகே கூடினர்.

புதுவை விடுதலைக்காக போராடிய தியாகிகளின் உருவப்படங்களுடன் கூடிய பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அசோக்ராசு, சத்தியமூர்த்தி, முருகுனுகுமார், சுபாஷ் சந்திரபோஸ், பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி சிவக்குமார், மீனவர் விடுதலை வேங்கை மங்கையர்செல்வன், தமிழ் கழகம் தமிழுலகன், தமிழர்களம் அழகர், வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், மனித உரிமைகள் கழகம் முருகானந்தம் உட்டபட பல்வேறு அமைப்புகளை சர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தொடர்ந்து கையில் கருப்பு துணியால் கைகளை கட்டிக்கொண்டு போராட்ட பேனரை தூக்கிப் பிடித்தனர். போலீசார் இதற்கு அனுமதியில்லை எனக்கூறி பேனரை பறித்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அந்த பேனரை பறித்துச்சென்றனர்.

மேலும் தடையை மீறி போராட்டம் நடத்திய 18 பேரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.  

Tags:    

Similar News