புதுச்சேரி

கூட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் இருந்து காணமல் போவார்கள்

Published On 2023-10-31 09:20 GMT   |   Update On 2023-10-31 09:20 GMT
  • அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
  • சங்கர் என்ற கோவிந்தன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார் தலைமை தாங்கினார். சிவாலயா இளங்கோவன், டாக்டர் கணேஷ், சித்தானந்தம், ராஜேந்திரன், சங்கர் உடையார், செந்தில்முருகன், வெற்றியழகன், புகழ் என்ற ராமலிங்கம், சங்கர் என்ற கோவிந்தன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்ட த்தில் அ.தி.மு.க. மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் சிறப்புரையாற்றினார். நெல்லித்தோப்பு தொகுதி பலமுறை அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதியாகும். திமுகவை சேர்ந்த ஜானகிராமன் இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்-அமைச்சராக இருந்தார்.

தி.மு.க. முதல்-அமைச்சரையே எதிர்த்து தொண்டர்கள் தீவிர பணியாற்றிய தொகுதியாகும். இந்த தொகுதியின் தொண்டர்களின் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினராக பதவி சுகம் கண்டவர் இன்று கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்.

கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் இருந்து காணாமல் போவா ர்கள். நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக உழைப்பால் பாஜகவை சேர்ந்த ஒரு சிறு பிள்ளை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சட்டமன்ற தொகுதி முழுவதும் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆளும்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இந்த தொகுதியினுடைய முன்னேற்றத்திற்கு இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநிலத்தில் பாஜகவும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணியில் இருந்தாலும் மாண்புமிகு முதலமைச்சர் மன நிம்மதியுடன் முதல்-அமைச்சராக செயல்பட முடியவில்லை. முதலமைச்சரின் அனைத்து முடிவுகளிலும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. புதுச்சேரியை ஆளும் அரசு விளம்பர அரசாகவும், அடிக்கல் நாட்டும் அரசாகவும் உள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான அரசாக இல்லை.

இவ்வாறு பேசினார்.


Tags:    

Similar News