புதுச்சேரி

வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ள காட்சி.

வாகனங்கள் பழுதாகி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-07-11 06:02 GMT   |   Update On 2023-07-11 06:02 GMT
  • விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.
  • மண் பாதையில் டேங்கர் லாரியும் மினி வேனும் அடுத்தடுத்து பழுதாகி போனது.

புதுச்சேரி:

கண்டமங்கலம் அருகே நவம்மாள் காப்பேர் பகுதியில் தற்பொழுது விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் ஒரு வழி பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை  மண் பாதையில் டேங்கர் லாரியும் மினி வேனும் அடுத்தடுத்து பழுதாகி போனது.

இதனால் அங்கு ஒரு வழிப்பாதை என்பதால் புதுச்சேரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றது இதனால் கல்லூரி செல்லும் பேருந்துகள் பள்ளி செல்லும் வாகனங்கள் பணிக்கு செல்வோரின் இரு சக்கர வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் சாலையிலேயே நின்றதால் போக்கு வரத்து ஸ்தம்பித்தது.

இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழுதான வாகனங்களை அப்புறப்படுத்தி மற்ற

வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர் இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News