புதுச்சேரி

கோப்பு படம்.

இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது

Published On 2023-11-20 04:57 GMT   |   Update On 2023-11-20 04:57 GMT
  • விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், செந்தில்வேல், ஆறு முகம், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு வீரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊக் கத்தொகை, உதவித்தொகையை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு, நடைபயிற்சி மேற்கொள்ள வருவோரிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறான முயற்சிகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வரக் கூடாது.

தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முழு வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, போதிய காவலாளிகளை பணிக்கு அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

Tags:    

Similar News