புதுச்சேரி

கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசிய காட்சி.

புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமைய ஒரணியாய் உழைக்க வேண்டும்

Published On 2023-11-02 09:41 GMT   |   Update On 2023-11-02 09:41 GMT
  • எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
  • களையப்பட வேண்டும் என்றால் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் ஓரணியில் நின்று கடுமையாக உழைக்க வேண்டும்.

புதுச்சேரி:

நெல்லித்தோப்பு தொகுதி திமுக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் லெனின் வீதி தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

தொகுதி அவைத்தலைவர் பாணுகணேசன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் நடராஜன், வேலவன் வரவேற்றனர்.

கூட்டத்தில் தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது:-

தேசிய கட்சிகள் புதுவையை ஒரு சொர்க்க பூமியாகத்தான் பார்க்கிறதே தவிர அதற்கான அங்கீகாரத்தை தர மறுக்கிறது. பாஜகவின் ஆளுமையால் புதுவையில் முதல்- அமைச்சருக்கான அதிகாரம் பறிபோய்விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், அரசுக்கும் மரியாதை இல்லை.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் எண்ணத்தை ஆட்சியாளர்கள் சிதைத்துள்ளனர்.

புதுவையில் மூடிக்கிடக்கின்ற ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், மூடப்பட்டுள்ள மில்களை திறக்க வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். இதைப்பற்றி கவலைப்படாத ஆட்சி புதுவையில் நடக்கிறது. இவையெல்லாம் களையப்பட வேண்டும் என்றால் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் ஓரணியில் நின்று கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

இதில், நிர்வாகிகள் தொமுச மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருண், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கிருபாசங்கர், சந்துரு, உள்ளிட்டோர் பங்கேற்றனர் 

Tags:    

Similar News