புதுச்சேரி

கோப்பு படம்.

சென்டாக் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டது ஏன்?

Published On 2023-11-01 07:50 GMT   |   Update On 2023-11-01 07:50 GMT
  • பரபரப்பு தகவல்
  • காலத்தோடு கலந்தாய்வு நடத்தாத சென்டாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி:

புதுவை சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடக்கிறது, தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக சென்டாக் நிர்வாகம் செயல்படுகிறது என அரசியல்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் செப்டம்பர் 30ந் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க அறிவுறுத்தியது.

ஆனால் சென்டாக் நிர்வாகம் காலத்தோடு கலந்தாய்வை நடத்தவில்லை. இதனால் முதல்-அமைச்சர், கவர்னர் ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தி காலதாமத கலந்தாய்வுக்கு அனுமதி பெற்றுள்ளனர். காலத்தோடு கலந்தாய்வு நடத்தாத சென்டாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்திருந்தார்.

இதனிடையே தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகியுடன், சென்டாக் கன்வீனர் சிவராஜ் அலுவலகத்தின் எதிரே காரில் அமர்ந்து பேசிய வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில் சென்டாக் கன்வீனர் சிவராஜ் அதிரடியாக அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்டாக் ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டாக பதவி வகித்த ருத்ரகவுடுவும் மாற்றப்பட்டுள்ளார்.

சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளராக இருந்த உயர்கல்வித்துறை இயக்குனர் அமன்சர்மா சென்டாக் ஒருங்கிணைப்பா ளராகவும், வில்லியனூர் கஸ்தலூரிபாய் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் செரில் ஆன் கெரடின் சிவன் சென்டாக் கன்வீனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்டாக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் அதன் அடுத்தகட்ட நட வடிக்கைகள் தெரியவரும்.

Tags:    

Similar News