மொபைல்ஸ்

பிளாக்‌ஷிப் கேமரா சென்சார்களுடன் உருவாகும் பிக்சல் 7a

Published On 2022-10-31 04:13 GMT   |   Update On 2022-10-31 04:13 GMT
  • கூகுள் நிறுவனம் புது பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • பிக்சல் சீரிசில் “a” டேக் செய்யப்பட்ட மாடல்களை கூகுள் நிறுவனம் மிட் ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்து வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். முந்தைய பிக்சல் A சீரிஸ் மாடலை விட இதன் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும். முன்னதாக பிக்சல் 3a ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் A சீரிஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு பிக்சல் A சீரிஸ் வெளியீட்டின் போதும் பிளாக்‌ஷிப் அம்சங்கள், தரம் மற்றும் அனுபவத்திற்கான இடைவெளியை குறைக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. இதே வழக்கம் பிக்சல் 4a 5ஜி மாடலிலும் தொடர்ந்தது. பிக்சல் 4a 5ஜி மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பிரீமியம் மெட்டல் பாடி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 5a மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

பிக்சல் 6a மாடலில் மட்டும் கேமரா சென்சார்கள் முந்தைய பிக்சல் 5a மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஒபன் சோர்ஸ் கோட் விவரங்களில் கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் "Lynx" எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட தகவல்களில் பிக்சல் ஸ்மார்ட்போன் சீனாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிலும் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் செராமிக் பாடி கொண்டிருக்கும் என தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் செராமிக் பாடி கொண்ட முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பிக்சல் 7a பெறும்.

Tags:    

Similar News