மொபைல்ஸ்

இந்தியாவில் அறிமுகமான மோட்டோ எட்ஜ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்

Published On 2023-01-10 04:08 GMT   |   Update On 2023-01-10 04:08 GMT
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் தற்போது மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
  • கடந்த மாதம் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் 30 ஃபியுஷன் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 ஃபியுஷன் ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே மற்றும் சோலார் கோல்டு என இருவித நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவா மக்னெடா ஸ்பெஷல் எடிஷன் மாடல் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விவா மக்னெடா 2023 ஆண்டின் பண்டோன் நிறம் ஆகும். பண்டோன் 18-1750 நிறத்தில் அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது என மோட்டோரோலா தெரிவித்துள்ளது. இயற்கையை சார்ந்து அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த நிறம் பல்வேறு விதங்களை பிரதிபலிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மென்மையான சைவ லெதர் மூலம் உருவாக்கப்பட்ட பாகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பாலிஷ்டு சாண்ட்பிலாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம், 3D கிலாஸ் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எட்ஜ் 30 ஃபியுஷன் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியுஷன் அம்சங்கள்:

6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 10-பிட் OLED எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்

அட்ரினோ 660 GPU

8ஜிபி LPDDR5 ரேம்

128ஜிபி UFS 3.1 மெமரி

ஆண்ட்ராய்டு 12

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா, OIS

13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிலாஷ்

32MP AF செல்ஃபி கேமரா

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

யுஎஸ்பி டைப் சி

4400 எம்ஏஹெச் பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியுஷன் விவா மக்னெடா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

இதுதவிர புது மோட்டோ எட்ஜ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்டு கொண்டு மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 699 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News