மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் விவரங்கள்

Published On 2022-11-09 04:16 GMT   |   Update On 2022-11-09 04:16 GMT
  • ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • ரியல்மி 10 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ரியல்மி நிறுவனம் சீன சந்தையில் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரியல்மி 10, ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் ரியல்மி 10 சீரிசில் இடம்பெற்று இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மூன்று சாதனங்களும் TENAA மற்றும் 3C போன்ற சான்றுகளை பெற்று இருக்கின்றன.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ளன. அதன்படி ரியல்மி 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படுகிறது.

கீக்பென்ச் தளத்தில் இரு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் பிராசஸர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், அவற்றின் CPU மற்றும் GPU அம்சங்களை கொண்டு பிராசஸர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், ரியல்மி 10 ப்ரோ மாடலில் 8 ஜிபி ரேம், ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 10 ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டில் 691 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 2026 புள்ளிகளையும் பெற்றுள்ளது. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல் சிங்கில் கோரில் 845 புள்ளிகள், மல்டி கோர் டெஸ்டில் 2378 புள்ளிகளை பெற்று இருக்கிறது. முந்தைய தகவல்களில் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களில் அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம், 512 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். ரியல்மி 10 ப்ரோ மாடலில் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், 10 ப்ரோ பிளஸ் மாடலில் 67 வாட் ரேபிட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். இரு மாடல்களிலும் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News