மொபைல்ஸ்

200MP பிரைமரி கேமரா - அசத்தலாக உருவாகும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் - டீசர் வெளியீடு!

Published On 2023-05-05 14:56 GMT   |   Update On 2023-05-05 14:56 GMT
  • ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் அதிாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
  • புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் சீன சந்தையில் புதிய ரியல்மி 11 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் ரியல்மி 11 5ஜி, ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி என்று மூன்று மாடல்கள் இடம்பெறுகின்றன. மே 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ரியல்மி 11 சீரிஸ் டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 200MP சாம்சங் ISOCELL HP3 சென்சார் கொண்டிருக்கும் என்று ரியல்மி அறிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 4x லாஸ்லெஸ் ஜூம் வசதி, 20x மூன் மோட் ஜூம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ப்ரோ பிளஸ் வேரியண்ட் 200MP பிரைமரி கேமராவுடன், OIS சப்போர்ட் கொண்டிருக்கும்.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், மாலி G68 MC4 GPU, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உள்பட ஒட்டுமொத்த டிசைன் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதன்படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

Tags:    

Similar News