மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு!

Published On 2023-03-02 04:16 GMT   |   Update On 2023-03-02 04:16 GMT
  • ரியல்மி நிறுவனம் தனது புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டை அதிகாரப்பூர்வாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
  • புதிய ரியல்மி C55 ஸ்மார்ட்போன் 256 ஜிபி மெமரி, மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர் கொண்டிருக்கிறது.

ரியல்மி C55 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஐபோன் 14 போன்ற டைனமிக் ஐலேண்ட் அம்சம் கொண்டிருக்கும் முதல் ரியல்மி ஸ்மார்ட்போன் ஆகும். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் அன்பாக்சிங் வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் முழு டிசைன் மற்றும் அம்சங்கள் தெரியவந்தது.

இந்த நிலையில், ரியல்மி C55 ஸ்மார்ட்போன் டீசர் அந்நிறுவன சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரியல்மி C55 முதல் டீசரை ரியல்மி துணை தலைவர் பகிர்ந்து இருந்தார். இதில் ஸ்மார்ட்போன் சன்ஷவர் நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

இதுதவிர டிப்ஸ்டர் பரஸ் குக்லானி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ரியல்மி C55 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 7 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் விற்பனை மார்ச் 8 ஆம் தேதி துவங்கும் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ரியல்மி C55 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

ரியல்மி C55 ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

Tags:    

Similar News