மொபைல்ஸ்
null

அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்ட புதிய ரியல்மி நார்சோ N55 - பட்ஜெட் விலையில் அறிமுகம்!

Published On 2023-04-12 08:29 GMT   |   Update On 2023-04-12 08:31 GMT
  • ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ ஸ்மார்ட்போன் ஐபோனில் உள்ளதை போன்ற மினி கேப்ஸ்யுல் கொண்டிருக்கிறது.
  • நார்சோ N55 மாடலில் மீடியாடெக் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்சோ N55 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரியல்மி நார்சோ N55 மாடலில் 6.72 இன்ச் FHD+ 90Hz LCD ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும் மினி கேப்ஸ்யுல் கொண்ட இரண்டாவது ரியல்மி ஸ்மார்ட்போன் இது ஆகும்.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C55 மாடலிலும் இதே போன்ற மினி கேப்ஸ்யுல் வழங்கப்பட்டு இருந்தது. இந்த கேப்ஸ்யுல் போன் சார்ஜிங் விவரம், லோ பேட்டரி, டேட்டா பயன்பாடு, தினசரி நடந்த தூரம் உள்ளிட்டவைகளை காண்பிக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், கூடுதலாக 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் பிளாஸ்டிக் பேக், ப்ரிசம் டிசைன் மற்றும் க்ளிட்டர் சேண்ட் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ N55 அம்சங்கள்:

6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

ARM மாலி-G52 2EEMC2 GPU

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

64MP பிரைமரி கேமரா

2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ்

8MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரியல்மி நார்சோ N55 ஸ்மார்ட்போன் ப்ரிசம் பிளாக் மற்றும் ப்ரிசம் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ரியல்மி, அமேசான் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி துவங்குகிறது.

இதுதவிர அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் முறையில் நாளை (ஏப்ரல் 13) விற்பனைக்கு வருகிறது. இதில் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அறிமுக சலுகை:

ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், அமேசான் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள், அமேசானில் மாத தவணை முறை அல்லது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் ரியல்மி தளத்தில் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது நார்சோ N55 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ. 500 மற்றும் 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News