46 நாட்கள் பேட்டரி லைஃப் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
- கார்மின் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளின் போது பயன்படுத்த உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்-இன் அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஆகும்.
கார்மின் நிறுவனம் கடந்த ஆண்டு எண்டியுரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மலை ஏறுதல், ஹைகிங் என சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளின் போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் அப்டேட் செய்யப்பட்ட புது மாடலை கார்மின் அறிமுகம் செய்து இருக்கிறது. கார்மின் எண்டியுரோ 2 பல்வேறு புது அம்சங்களை கொண்டுள்ளது.
குறைந்த எடை கொண்ட டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் கார்மின் எண்டியுரோ 2 டச் ஸ்கிரீன் மற்றும் சஃபயர் லென்ஸ் பாதுகாப்பு, நைலான் பேண்ட் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி லைஃப்-ஐ ஜிபிஎஸ் மோடில் 150 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளலாம். இதில் சன் சார்ஜிங் மற்றும் SatIQ தொழில்நுட்பம் உள்ளது. இது ஸ்மார்ட்வாட்ச் மோடில் அதிகபட்சம் 46 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
எண்டியுரோ 2 மாடலில் பில்ட்-இன் எல்இடி பிளாஷ்லைட் உள்ளது. இதனை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது ஃபெனிக்ஸ் 7 சீரிசில் வழங்கப்பட்டதை போன்றதாகும். ஆனால், இது இருமடங்கு அதிக பிரகாசமாக உள்ளது. இதில் டோபோ ஆக்டிவ் மேப்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் நெக்ஸ்ட் ஃபோர்க், விஷூவல் ரேஸ் பிரெடிக்டர், கிரேடு-அட்ஜஸ்ட் செய்யப்பட்ட பேஸ் ஆப்ஷன் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன.
இத்துடன் ஹார்ட் ரேட், ஸ்டிரெஸ், SpO2, ஸ்லீப் டிராக்கிங், பாடி பேட்டரி, பிட்னஸ் ஏஜ் என ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் கார்பின் பே, இன்சிடெண்ட் டிடெக்ஷன் மற்றும் மியூசிக் ஸ்டோரேஜ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. கார்மின் எண்டியுரோ 2 மாடலின் விலை 1,099.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 511.35 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.